Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Sathriyan Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  டெல்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மிக்கு அமோக வரவேற்பு; வாக்குப்பதிவின் சதவீதம் அதிகரிப்பு

டெல்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மிக்கு அமோக வரவேற்பு; வாக்குப்பதிவின் சதவீதம் அதிகரிப்புடெல்லி சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2013 தேர்தலில் பதிவானதை விட ஒரு சதவீதம் அதிகம் ஆகும். வாக்குப்பதிவு முடியும் நேரமான 6 மணிக்குப் பிறகும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவே, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 64 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு பின்பு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 3 மணி வரை வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் பல்வேறு ஏஜென்சிகளுடன் இணைந்து வெவ்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.
அதில், சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில், ஆம் ஆத்மிக்கு 31 முதல் 39 வரையிலான இடங்களும், பா.ஜ.க.வுக்கு 27 முதல் 35 வரையும், காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் 4 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சி செரோ நடத்திய கருத்துக் கணிப்பில், ஆம் ஆத்மி 35 முதல் 43 வரையிலான இடங்களையும், பாஜ.க. 23 முதல் 29 இடங்களையும், காங்கிரஸ் 3 முதல் 5 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏ.பி.பி. நீல்சன் நடத்திய கருத்து கணிப்பில், ஆம் ஆத்மி 39 இடங்களிலும், பா.ஜ.க. 28 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், நியூஸ் நேசனின் கருத்து கணிப்பில், ஆம் ஆத்மி 39 முதல் 43 வரையிலான தொகுதிகளையும், பா.ஜ.க. 25 முதல் 29 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 முதல் 3 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகளின்படி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.
கடந்த 3 முறையாக வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 57.58 சதவீத வாக்குகள் பதிவானது. இது 2013-ல் 66 சதவீத மாகவும், தற்போது 67 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

  Source : justknow.in
Post Date : 08-02-15
Total Visitors : 9
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments