Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Kathanayagan Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  டெல்லியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது; அமீது அன்சாரி வாக்குப்பதிவு

டெல்லியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது; அமீது அன்சாரி வாக்குப்பதிவுடெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. மொத்த வாக்காளர்கள் 1.33 கோடி பேர். இதில் ஆண்கள் 73.89 லட்சம், பெண்கள் 59.19 லட்சம் பேர். மூன்றாவது பாலினத்தை சேர்ந்தவர்கள் 862 பேர் ஆவர். டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி , ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி இருந்தாலும் பாஜக - ஆம் ஆத்மி இடையேதான் ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
முதல்வர் வேட்பாளர்களாக பாஜக தரப்பில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடியும், ஆம் ஆத்மி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கானும் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
டெல்லியில் குளிர் நிலவுவதால் வாக்குப்பதிவு மந்தமாகவே தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் சுமார் 1.50 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். மக்கள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் 12,177 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 714 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 191 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என தெரியவந்துள்ளது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 55000 ராணுவ வீரர்கள் தேர்தல் சுமூகமாகவும், எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெறும் வகையில், 55,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில்120 துணை ராணுவ வீரர்களும் அடங்குவர். மூன்றடுக்கு பாதுகாப்பு வாக்குச் சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடியும்.
துணை குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி தனது வாக்கை நிர்மாண் பவன் வாக்குச் சாவடியில் செலுத்தினார். மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தாயார் கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ண நகர் தொகுதியில் வாக்குப் பதிவு செய்தார். அனைத்து இடங்களிலும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை வரும் 10-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பிற்பகலுக்குள் டெல்லியில் எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது என்பது தெரிந்துவிடும்.

  Source : justknow.in
Post Date : 07-02-15
Total Visitors : 10
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments