Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Underworld: Blood Wars (3D) (English) Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

   ஸ்ரீரங்கம் தொகுதி களை கட்டியது; தொகுதியெங்கும் அதிமுகவின் உற்சாக பணிகள்

  ஸ்ரீரங்கம் தொகுதி களை கட்டியது; தொகுதியெங்கும் அதிமுகவின் உற்சாக பணிகள் தப்பாட்ட கலைஞர்கள் மேளம் தாளங்களுடன் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்குத்தான் எப்போது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இருந்தாலும் இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வித்தியாசத்தில் வாக்கு பெற்று வெற்றியை தேடித்தர தலைமை உத்தரவிட்டதன்படி பம்பரமாக சுற்றி வேலை பார்க்கின்றனர் அதிமுகவினர்.
பிப்ரவரி 13-ந் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணி தேர்தல் பார்வையாளர் பால்கார்சிங் முன்னிலையில் நடந்தது. ஒரே சின்னங்களை கேட்ட சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களத்தில் 29 பேர் போட்டியில் உள்ளனர். இதனால் 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக, கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் நேற்று தங்கள் பிரசாரத்தை தொடங்கினர். முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுயேட்சைகளும் பிராசரத்தில் ஈடுபட உள்ளதால் ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வளர்மதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் தொகுதி முழுவதும் குவிந்துள்ளனர்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளைக் கொண்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்களை தேர்தல் பணிக்குழுவில் உள்ளவர்கள் தினமும் சந்தித்து அ.தி.மு.க.விற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். ஒவ்வொரு பஞ்சாயத்துக்கு ஒருவர் தலைமையின் கீழ் குறைந்தது 50 பேராவது தெருக்கள் முதல் இல்லங்கள் வரை நடந்துக்கொண்டேயிருக்கின்றனர். எங்கும் அதிமுகவின் கரை வேட்டிகளும், சின்னங்களுமே பிரகாசிக்கின்றன. எந்த தேர்தலையும் விட இந்தத் தேர்தலில் அதிமுகவினரின் உற்சாக பணி கடந்த தேர்தலை காட்டிலும் பன்மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வளர்மதியை கரை சேர்க்கும் எனலாம்.

  Source : justknow.in
Post Date : 01-02-15
Total Visitors : 12
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments