Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Ramba Theatre - Trichy Meyaadha Maan Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  நடிகர் ரஜினியை சந்தித்த அய்யாக்கண்ணுக்கு விவசாய சங்கங்கள் கண்டனம்

நடிகர் ரஜினியை சந்தித்த அய்யாக்கண்ணுக்கு விவசாய சங்கங்கள் கண்டனம்நடிகர் ரஜினிகாந்த்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நேற்று சந்தித்து பேசினார். தனிப்பட்ட முறையில் ரஜினியை சந்தித்ததுப் பேசியதற்கு காவிரி பாசன் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். இர்டு குறித்த விவரம் வருமாறு;
விவசாயிகளின் மீட்பராக தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் திரு. அய்யாகண்ணு அடுத்த பரபரப்புக்காக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
தன்மானத்தோடு வாழ்ந்த தமிழக விவசாயிகளை போராட்டம் என்ற பெயரில் டெல்லி அழைத்து சென்று நிர்வாணமாக்கி வீதியில் ஒடவிட்டு அனைத்து விவசாயிகளையும் அசிங்கப்படுத்தி தலைகுனிய வைத்த அய்யாகண்ணு தன்னை முன்னிறுத்தி கொள்ள எடுத்துக்கொண்ட அடுத்த அஸ்த்திரம் தான் ரஜினியை சந்தித்தது. அரசியல் ஆசை அவ்வப்போது எட்டிப்பார்க்கையில் ஏதாவது செய்வதாக அவரும் உறுதிகொடுப்பார்.
இது தான் கடந்த கால வரலாறு. கன்னட வெறியர்கள் காவிரியை மையப்படுத்தி கலவரம் செய்யும் போதெல்லாம் மௌனசாமி மடத்தில் இருந்தபடி வேடீக்கைபார்க்கும் ரஜினியும், விவசாயிகளின் வாழ்கையை கேவலபடுத்தி விளம்பரம் தேடும் அய்யாகண்ணும் தென்னக நதிகளை இணைக்க கை கோர்த்து இருப்பது தமிழர்க்கும், தமிழுக்கும் நலம் பயக்க அல்ல என்பது மட்டும் உறுதி.
மத்திய பாஜக அரசின் செல்லப்பிள்ளை என கூறப்படும் ரஜினி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் குரல் கொடுத்து உதவட்டும் பிறகு தென்னக நதிகளை இணைக்க ஒருகோடி தரட்டும்.
வீராணத்து கரையில் வெண்பரவியில் வந்த பொன்னியின் செல்வனை போல தன்னை காட்டிக்கொள்ளும் அய்யாகண்ணு காவிரி மேலாண்மை வாரியம் பற்றியும், மேகதாது அணை தடுப்பு பற்றியும் ரஜினியிடம் பேசி குரல்கொடுக்க சொல்லாமல் தென்னக நதிகள் இணைப்புக்காக சந்தித்ததாக கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேற்கண்டவாறு இளங்கீரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

  Source : justknow.in
Post Date : 19-06-17
Total Visitors : 99
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments