திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பாக பரிமாற்று திட்ட நிகழ்ச்சி மற்றும் மரபுசார் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மணச்சநல்லூர் ஒன்றியம் இராசாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், அப்பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மற்றும் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஆசிரியர்களுடன் இணைந்து பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
இதில் நொண்டி அடித்தல், பாண்டியாடுதல், கல்லா, மண்ணா, சதுரங்கம், போன்றவற்றுடன் வினாடி-வினா மற்றும் கற்றல் கற்பித்தல், அறிவியல் உபகரணங்களை பார்த்து உபகரணங்கள் செய்தல் முறையை எளிய வகையில் அறிந்து பாடத்தைக் கற்பித்தல், மாற்றுப் பள்ளி மாணவர்கள் இப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து கற்றலை மேம்படுத்திக் கொள்ளுதல், பிற மாணவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் மாற்றுப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து மதிய உணவு பரிமாறப்பட்டது.
அதன் பின்னர் தண்ணீர் அமைப்புடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது. இதில் மரபுசார் பொங்கல் விழா நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைப்பின் செயலாளர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். இணைச்செயலாளர்கள் ஆர்.ஏ. தாமஸ் ,சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக்குழு உறுப்பினர் சிலம்பம் கார்த்திக் குழுவினர்களின் சிலம்பாட்டம் நடைபெற்றது.
பொங்கல் விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா மற்றும் பிரேம், எடிசன், டென்சிங் உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மணச்சநல்லூர் இராசாம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் டி. ஆல்பர்ட், செந்தண்ணீர்புரம் மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர்கள் அன்னபூரணி, மார்கரெட் விக்டோரியா, அறிவியல் உதவி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, மரினா, சந்திராதேவி, ரீனா, ராணி மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நடைபெற்றது.

Invite People To Here