Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  கடலூரில் தடையை மீறி மஞ்சுவிரட்டு: விழா ஒருங்கிணைப்பாளர் உள்பட 4 பேர் கைது

கடலூரில் தடையை மீறி மஞ்சுவிரட்டு: விழா ஒருங்கிணைப்பாளர் உள்பட 4 பேர் கைது உச்சநீதிமன்ற தடையை தகர்த்தெறிந்த நாம் தமிழர் கட்சியினர் கடலூரில் மஞ்சுவிரட்டு போட்டியை அமர்க்களமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் வதைக்கப்படுவதாகவும், இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பீட்டா அமைப்பு குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்தது. இந்த தடையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவில்லை.
இந்தாண்டாவது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே இருந்தது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கனவே திட்டமிட்டதன்படி இன்று கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்று வருகிறது.
நாம் தமிழர் கட்சியினர் உச்சநீதிமன்றத் தடையை மீறி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தி வருகின்றது. இந்தப்போட்டியில் 10 காளைகள் மற்றும் 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த காவல்துறை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த விழா ஒருங்கிணைப்பாளர் உள்பட 4 பேரை கைது செய்து தற்போது மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  Source : justknow.in
Post Date : 12-01-17
Total Visitors : 143
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments