Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

   +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; 91.1% மாணவர்கள் தேர்ச்சி ; விருதுநகர் மாவட்டம் 97% பெற்று மாநிலத்தில் முதலிடம்

   +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; 91.1% மாணவர்கள் தேர்ச்சி ; விருதுநகர் மாவட்டம் 97% பெற்று மாநிலத்தில் முதலிடம்+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்தாண்டு 91.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சியடைந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ம் தேதி முடிவுற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.
அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இன்று காலை பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை இந்த இணையதளங்கள் வாயிலாக பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், இந்தாண்டு முதன் முதலாக மாணவர்கள் தெரிவித்துள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் மதியம் 2 மணிக்குள் அனைவருக்கும் குறுந்தகவல்கள் சென்றடைந்து விடும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.
* தமிழகம், புதுவையில் பிளஸ் டு பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
* மணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம்
* வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்
* கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
* 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
* 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம்,
* 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம்

  Source : justknow.in
Post Date : 16-05-18
Total Visitors : 313
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments