Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  நாளை குடிநீர் நீரேற்று நிலைய பகுதிகளில் மின் நிறுத்தம்; குடிநீர் விநியோகம் தடை

நாளை குடிநீர் நீரேற்று நிலைய பகுதிகளில் மின் நிறுத்தம்; குடிநீர் விநியோகம் தடைதிருச்சி மாநகராட்சியில் நாளை நீரேற்று நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவிருப்பதால் அப்பகுதியில் மின் விநியோகமும், குடிநீர் விநியோகமும் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்ட நிலையம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களுக்கு மின் விநியோகம் நடைபெறும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 14-ம் தேதி நடைபெறுவதையொட்டி காலை 9.45 மணிமுதல் மதியம் 5.00 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நாளை மின் நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளாவனவாவது; கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட் ஜங்ஷன், உய்யக் கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும் மற்றும் பிராட்டியூர்கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ் நகர், ஜெய நகர் மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை 14-ம் தேதி ஒருநாள் காலை 9.45 மணிமுதல் மதியம் 5.00 மணிவரை குடிநீர் விநியோகம் இருக்காது.
நாளை மறுநாள் வழக்கம்போல் 15-ம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தனிஅலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Source : justknow.in
Post Date : 13-06-18
Total Visitors : 105
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments